கார்த்திக்கு ஜோடியாகும் ராஷி கன்னா..??

It has been reported that actor Karthi will play two roles in Sardar

சர்தார் படத்தில் நடிகர் கார்த்தி இரண்டு வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் கார்த்தி சுல்தான் படத்தின் வெற்றியை தொடர்நது இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு 70 % முடிந்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் கார்த்தியின் 22 படத்தை இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்குகிறார், படத்திற்கு சர்தார் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

மேலும் தென்காசி மற்றும் மைசூர் பகுதிகளில் இந்த படத்திற்கான படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தி உளவாளி போலீஸ் என்று இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ராஷி கன்னா நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.