அந்த பாலிவுட் பிரபலத்தை மிரள வைத்த கங்குவா! தயாரிப்பாளர் சொன்ன சுவாரசிய தகவல்!
கங்குவா படத்தை பார்த்துவிட்டு பாலிவுட் பிரபலம் கரண் ஜோகர் 1 மணி நேரம் இயக்குநர் சிறுத்தை சிவாவை பாராட்டி பேசியுள்ளார்.
சென்னை : கங்குவா படத்தில் என்னதான் இருக்கிறது என்பதைப் பார்க்க சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகின்ற நவம்பர் மாதம் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கான இறுதிக்கட்ட பணிகளும் மும்மரமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
இந்த சூழலில், படத்தினை இதுவரை எடிட் செய்யப்பட்ட காட்சிகளைப் பல பிரபலங்கள் பார்த்துவிட்டு தங்களுடைய விமர்சனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். இதுவரை சிறிது காட்சிகளைப் பார்த்துவிட்டு அவர்கள் கூறிய வார்த்தைகள் அனைத்தும் படத்தின் பாசிட்டிவாக தான் இருக்கிறது. குறிப்பாக, பல வெற்றிப் படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கங்குவா’ நுஸ்வர்யம் அணி வகுக்கும்.. ஆர்ப்பரிக்கும்.. ஆரவாரகிடும்.. வழ்த்துகள்.. எனக் கூறியிருந்தார்.
அவரைத்தொடர்ந்து பாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் ஒருவர் கங்குவா படத்தைப் பார்த்துவிட்டுப் பாராட்டிப் பேசியுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை பாலிவுட்டில் முன்னணி தொகுப்பாளராகவும், வளர்ந்து வரும் தயாரிப்பாளராகவும் இருக்கும் கரண் ஜோகர் தான். இவர் தான் சமீபத்தில் கங்குவா படத்தைப் பார்த்துவிட்டுப் புகழ்ந்து பேசியுள்ளார்.
மும்பையில், கங்குவா படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்திற்கு அலுவலகம் ஒன்று இருக்கிறது. அந்த அலுவலகத்திற்குச் சமீபத்தில் கரண் ஜோகர் சென்று கங்குவா படத்தின் 40 நிமிடம் காட்சியைப் பார்த்துள்ளார். பார்த்துவிட்டு வெளியை வந்தவுடன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிடமும், இயக்குநர் சிறுத்தை சிவாவிடமும் படம் பற்றிப் பாராட்டு பேசியுள்ளார்.
வெறுமையாக வார்த்தையால் பாராட்டிவிட்டுச் செல்லாமல் கிட்டத்தட்ட 1 மணி நேரம் அலுவலகத்தில் அமர்ந்து இயக்குநர் சிவாவைப் பாராட்டிப் பேசியுள்ளார். பாலிவுட்டில் இவ்வளவு பெரிய பிரபலம் படத்தைப் பாராட்டியுள்ளது மிகவும் பெரிய விஷயம் எனவும் இந்த தகவலை நெகிழ்ச்சியுடன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.