நடிகை ஹன்சிகா தொழிலதிபர் சோஹேல் என்பவரை கடந்த 4-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். திருமணத்தை தொடர்ந்து ஹன்சிகா நடிப்பை நிறுத்தாமல் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், அவர் நடிக்கவுள்ள புது படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
unknown nodeHansikaMotwani Wedding [Image Source: Twitter ]
போஸ்டரில் நடிகை ஹன்சிகா காஞ்சனா படத்தில் இருப்பது போல மிகவும் ஆக்ரோஷத்துடன் நாற்காலியில் அமர்ந்துள்ளார். இந்த படத்திற்கு ‘காந்தாரி’ என்ற தலைப்பும் வைக்கப்பட்டுள்ளது. போஸ்டரை பார்க்கையில் இந்த படம் பேய் படமாக இருக்கும் என தெரிகிறது.
Happy to present the first look of our @MasalaPix‘s #Gandhari starring @ihansika @actor_shirish in lead Releasing on March 2023
A Emotional Horror & comedy
Produced & Directed by @Dir_kannanR#GandhariFirstLook @BrigidaSaga @Dhananjayang @johnsoncinepro @digitallynow pic.twitter.com/fkgZJ0wfRX— MasalaPix (@MasalaPix) December 22, 2022
இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆர்.கண்ணன் என்பவர் இயக்குகிறார். அவரே படத்தை தயாரிக்கவும் செய்கிறார். திகில் கதைக்களத்தை வைத்து உருவாக்கப்படும் இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான முத்து கணேஷ் இசையமைக்கிறார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நடிகை ஹன்சிகா பேய் படத்தில் நடித்து வருவதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.
unknown nodeHansika Motwani Smile [Image Source: Twitter]
விரைவில் ‘காந்தாரி’ படத்தின் முதல் பாடல் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஹன்சிகா இந்த திரைப்படத்தை தொடர்ந்து சில வெப் சீரிஸ்களிலும், சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.