ரூல்ஸ் பிரேக் பண்ணாம இருந்தா நல்லா இருக்கும் என்று பாலாஜியிடம் கமல்ஹாசன் கூறுகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனி மற்றும் ஞாயிறன்று கமல்ஹாசன் தோன்றி அந்த வாரம் முழுவதும் நடந்ததை வைத்து போட்டியாளர்களை வச்சு செய்வது வழக்கம் .அது மட்டுமின்றி நாமினேஷனில் இருப்பவர்களில் சிலரும் வாக்குகள் அடிப்படையில் காப்பாற்றப்பட்டு, குறைவான வாக்கை பெற்ற நபர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார் .
இந்த நிலையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரோமோவில் பாலாஜியிடம் கமல் சில அறிவுரைகளை கூறுகிறார்.இந்த வார மணிக்கூண்டு டாஸ்கில் பாலாஜி 3 மணி நேரத்தை 1மணி 26 நிமிடத்தில் கணித்து தோல்வியுற்றார் .இவரது அணியில் ரம்யா மற்றும் சுச்சி இருந்தனர் . அவர்களிடம் அது குறித்து கேட்டு விட்டு என்ன சிரிக்கீறீங்க பாலாஜி என்றும் ,ரூல்ஸ பிரேக் பண்ணாம இருந்தா நல்லா இருக்கும் என்றும், விளையாட்டை கெடுக்காமல் விளையாடினால் டீமில் உள்ளவர்களும் சந்தோஷமாக இருப்பார்கள், நீங்களும் முன்னேற வாய்ப்பு இருக்க கூடும் என்றும் பாலாஜியிடம் கூறுகிறார் .இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் சம்பவம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
unknown node