பிப்.5ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ள 'களத்தில் சந்திப்போம்' திரைப்படம்!

The production company of the film has announced that the movie 'Let's Meet the Domain' will be released in theaters on February 5.

களத்தில் சந்திப்போம் திரைப்படம்  பிப்.5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் களத்தில் சந்திப்போம் .இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர, ராதா ரவி, ரோபோ சங்கர் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் நிறுவனம் தயாரித்துள்ளது.

சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான நிலையில், இப்படம் மாபெரும் வெற்றியை கொடுத்துள்ளது.  மாஸ்டரின் வெற்றியை பார்த்த தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது படங்களை திரையரங்குகளில் வெளியிட ஆர்வம் காட்டி வருகின்ற நிலையில்,  தைப்பூசம் அன்று சிபிராஜின் ‘கபடதாரி’ திரைப்படம் திரையரங்கில் வெளியாக உள்ளது.

இதனை தொடர்ந்து, களத்தில் சந்திப்போம் திரைப்படம்  பிப்.5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.