மீண்டும் விஜய் சேதுபதி – சிவகாத்திகேயன் மோதல்.! காதலர் தினத்தில் தியேட்டரில் திருவிழா தான்.!

எதிர்நீச்சல் - சூது கவ்வும், ரெமோ - ரெக்க ஆகிய படங்களின் மோதலை தொடர்ந்து வரும் காதலர் தினத்திற்கு காதுவாக்குல ரெண்டு காதல் - டான் மோத அதிக வாய்ப்புள்ளதாக

எதிர்நீச்சல் – சூது கவ்வும், ரெமோ – ரெக்க ஆகிய படங்களின் மோதலை தொடர்ந்து வரும் காதலர் தினத்திற்கு காதுவாக்குல ரெண்டு காதல் – டான் மோத அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படங்களில் ஒன்று காதுவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். நயன்தாரா, சமந்தா என இரு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் வேலைகள் முடிந்து, 2 பாடல்கள் வெளியாகிவிட்டது.

அடுத்து இந்த படத்தின் ட்ரைலர், ரிலீஸ் தேதி அறிவிக்கவேண்டியது தான் பாக்கி.

unknown node

அதேபோல, சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் டான். இந்த படத்தை அட்லீயின் உதவி இயக்குனர் சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கியுள்ளார். ப்ரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் வேலைகளும் முழுவதும் முடிந்து போஸ்ட் ப்ரொடெக்சன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

unknown node

டான் படம் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக அதிக வாய்ப்புள்ளதாம். அதே போல, காதுவாக்குல ரெண்டு காதல் திரைப்படமும் அதே காதல் தினத்தை குறிவைத்துள்ளதாம்.

ஆதலால், எதிர்நீச்சல் – சூது கவ்வும், ரெமோ – ரெக்க ஆகிய படங்களின் மோதலை தொடர்ந்து வரும் காதலர் தினத்திற்கு காதுவாக்குல ரெண்டு காதல் – டான் மோத அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வளர்ந்து வரும் ஹீரோக்களின் இந்த ஆரோக்கியமான மோதல் அவர்களின் மார்கெட்டிற்கு பெரிதும் உதவி புரியும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மீண்டும் விஜய் சேதுபதி – சிவகாத்திகேயன் மோதல்.! காதலர் தினத்தில் தியேட்டரில் திருவிழா தான்.!