நீதி வென்றுவிட்டது.! உண்மை ஜெயித்து விட்டது.! – விஷால் நெகிழ்ச்சி பதிவு.!

விஷால் மீது லைக்கா தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

விஷால் மீது லைக்கா தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் சக்ரா. இந்த படத்தை இயக்குனர் எம்.எஸ் ஆனந்தன் இயக்கி இருந்தார்.

இந்த திரைப்படத்தின் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக லைகா பட நிறுவனம் விஷால் மீது உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், விஷாலுக்கு எதிராக போடப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், பொய்யான வழக்கு போடப்பட்டதால், லைக்கா நிறுவனத்துக்கு 5 லட்சம் அபராதம் விதித்தும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

unknown node

இதனையடுத்து நடிகர் விஷால் தனது ட்வீட்டர் பக்கத்தில் “நீதி வென்றுள்ளது. உண்மை ஜெயித்துள்ளது” என தீர்ப்பை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.