கேஜிஎப் இயக்குனருடன் கைகோர்க்கும் ஜூனியர் என்.டி.ஆர்.! வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு..

சென்னை: ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் 31 படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் துவங்கும் என அறிவிப்பு.

KGF Director - NTR

சென்னை:ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் 31 படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் துவங்கும் என அறிவிப்பு.

தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது 41வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு, தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், என்டிஆருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததோடு, அவர் நடிக்கவிருக்கும் 31வது படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் துவங்கும் என அறிவித்துள்ளது.

unknown node

NTR Neel [Image – @MythriOfficial]கேஜிஎஃப் மற்றும் சாலார் போன்ற பிளாக் பஸ்டர் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்குகிறார். ஏற்கனவே, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘தேவாரா’ படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொண்டாட்டத்திற்கு மத்தியில், ரசிகர்களுக்கு ஜூனியர் என்டிஆரின் அடுத்த பட அப்டேட் வெளியாகி டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது. படம் பற்றிய கூடுதல் விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதற்கிடையில், ஜூனியர் என்டிஆர் தனது வரவிருக்கும் அதிரடி திரைப்படமான ‘தேவாரா பாகம் 1’ வெளியீட்டிற்கு தயாராகி வருகிறார். இந்த படத்தில் சைஃப் அலிகான், ஜான்வி கபூர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களைக் கொண்ட இந்தப் படத்தின் முதல் பாகம் கடலோர நிலங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.