அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் ஜெகபதிபாபு..?

Actor Jegapathi Babu plays the villain for Rajini in the movie Annatha

அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிகர் ஜெகபதி பாபு நடிக்கிறார்.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனா , குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,சூரி , சதீஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த மார்ச் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட முதல் அறிவிப்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தில் நடிகர் ஜெகபதி பாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று முந்தினம் வெளியானது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து இந்த படத்தில் ஜெகபதி பாபு நடிக்கும் கதாபாத்திரம் குறித்த தகவல் தற்போது பரவி வருகிறது. ஆம் இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார். இதனால் தற்போது ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியது என்றே கூறலாம்.