ஜகமே தந்திரம் திரைப்படம் படத்திற்கான அணைந்து பாடல்களும் நாளை வெளியாகவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார். (y not studios)தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன் மற்றும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த திரைப்படம்“நெட்பிளிக்ஸ்”ஓடிடி தளத்தில் வருகின்ற ஜூன் 18 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த நிலையில் தற்போது படத்திற்கான பாடல்கள் அனைத்தும் நாளை வெளியாகும் என்று அறிவிப்பு வெளியா கியுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளார்கள். மேலும் இந்த திரைப்படத்தில் 8 பாடல்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node