ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

It has been announced that the movie Jagame Tantra will be released directly on the Netflix ODT site on June 18.

ஜகமே தந்திரம் திரைப்படம் நேரடியாக  “நெட்பிளிக்ஸ்” ஓடிடி தளத்தில் வருகின்ற ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில்  உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார். y not studios தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கடந்த ஆண்டு மே 1 ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி சென்றது அதற்கு பிறகு இந்த திரைப்படம் “நெட்பிளிக்ஸ்” ஓடிடி தளத்தில் ரிலீஸாக உள்ளது. அதற்கான டீசரும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஜகமே தந்திரம் திரைப்படம் நேரடியாக  “நெட்பிளிக்ஸ்” ஓடிடி தளத்தில் வருகின்ற ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

unknown node
ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!