இந்த குத்தாட்டத்திற்கு முடிஞ்சா டிக்டாக் பண்ணுங்க! ஜோதிகாவின் நடனத்தை வைத்து சவால் விடும் படக்குழு!

தமிழ் சினிமாவில் முன்னனி ஹீரோயினாக இருந்து பிறகு நடிகர் சூர்யாவை காதல் திருமணம் செய்துகொண்டு குடும்பம், குழந்தைகள் என இருந்த நடிகை ஜோதிகா, தற்போது தனது

தமிழ் சினிமாவில் முன்னனி ஹீரோயினாக இருந்து பிறகு நடிகர் சூர்யாவை காதல் திருமணம் செய்துகொண்டு குடும்பம், குழந்தைகள் என இருந்த நடிகை ஜோதிகா, தற்போது தனது இரண்டாவது இன்னிங்க்ஸை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளார்.

இவரின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள ஜேக்பாட் திரைப்படம் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. தற்போது இப்படத்திலிருந்து ஜோதிகா குத்தாட்டம் போடும் வீடியோவை படக்குழு பதிவிட்டு, அதற்கு இணையாக டிக்டாக் நடனம் ஆட முடியுமா என சவால் விடுத்துள்ளனர். இந்த ப்ரோமோவில் ஜோதிகா செம குத்தாட்டம் போட்டுள்ளார்.