விஜயகுமார் வீட்டில் விசேஷம்! பேத்திக்கு பிரமாண்ட திருமணம்?

vijayakumar

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் விஜயகுமார் இரண்டு திருமணங்கள் செய்து கொண்டவர். முதல் மனைவியின் பெயர் முத்துக்கண்ணு. இரண்டாவது மனைவியின் பெயர் மஞ்சுளா. இதில் முத்துக்கண்ணுவிற்கு பிறந்த பிள்ளைகள் கவிதா, அனிதா , அருண் விஜய் மஞ்சுளாவிற்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர்.

சினிமாத்துறையில் பெரிய குடும்பம் என்றால் இவர்ளை கூறலாம். இந்நிலையில், கவிதா விஜயகுமார் பற்றி பெரிதாக யாருக்கும் தெரியாது. ஏனென்றால், விஜயகுமார்  குடும்பத்தில் சினிமா பக்கம் வராத ஒரே ஒருவர் அவர் தான். படிப்பில் கவனம் செலுத்து மருத்துவரான அவர் கோகுல் கிருஷ்ணன் என்ற மருத்துவரை  திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார்.

Anitha Vijayakumar
Anitha Vijayakumar [file image]
இவர்களுக்கு தியா என்ற மகளும், மகனும் உள்ளனர். தியாவும் தனது தந்தை தாயை போல நன்றாக படித்து மருத்துவராக இருக்கிறார். இவருக்கும் திலன் என்ற இளைஞருக்கும் கடந்த ஆண்டு பிரமாண்டமாக நிச்சியதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், அதனை தொடர்ந்து இந்த ஆண்டு அவர்களுக்கு திருமணம் நடைபெறவுள்ளதாம்.

விஜயகுமார் வீட்டில் விசேஷம்! பேத்திக்கு பிரமாண்ட திருமணம்?

தந்து மகள் திருமணம் பிரமாண்டமாக நடைபெறவேண்டும் என்பதால் இந்த திருமணத்திற்கு அனிதா தனது தந்தை விஜயகுமார் மற்றும் சகோதரி கவிதாவுடன் பல பிரபலங்களை அழைத்து வருகிறார். குறிப்பாக சூர்யா,  தனுஷ், ரஜினி, ஆகியோரை நேரில் சென்று அழைக்கவுள்ளாராம். விரைவில் திருமணம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சமீபத்தில் இவரது மகள் தியா கத்தாரில் இருந்து சென்னை வந்துள்ளார். அந்த வீடியோவை அனிதா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Anitha Vijayakumar (@anits1103)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்