மீண்டும் தொகுப்பாளராக களமிறங்குகிறாரா விஜய் சேதுபதி.?

It has been reported that Vijay Sethupathi is to host a cooking show aired on Sun TV.

விஜய் சேதுபதி சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள சமையல் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபல தென்னிந்திய நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி . தற்போது பாலிவுட்டிலும் களமிறங்கி கலக்கவுள்ளார் . தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் ஹீரோ வேடங்களில் மட்டுமின்றி வில்லன் வேடத்திலும் தனது அசத்தலான நடிப்பில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார் .அந்த வகையில் விஜய்க்கு வில்லனாக சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.அது மட்டுமின்றி உப்பென்னா என்ற தெலுங்கு படத்திலும் மிரட்டலான வில்லனாக நடித்திருந்தார்.

தற்போது இவரது நடிப்பில் லாபம் , துக்ளக் தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளிர்,மும்பைகர், மாமனிதன் உள்ளிட்ட பல படங்கள் உருவாகியுள்ளது .அது மட்டுமின்றி பாலிவுட்டில் மெர்ரி கிறிஸ்துமஸ்,காத்து வாக்குல ரெண்டு காதல் உட்பட பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.இவ்வாறு பிசியாக நடித்து வரும் இவர் தொகுப்பாளராக களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள சமையல் நிகழ்ச்சி ஒன்றை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளதாகவும், பிரமாண்ட உருவாக்க திட்டமிட்டுள்ள இந்த படத்தினை பிக்பாஸ் நிகழ்ச்சியை தயாரிக்கும் நிறுவனத்திடம் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏற்கனவே விஜய் சேதுபதி சன் டிவியில் ஒளிபரப்பான ‘நம்ம ஊரு ஹீரோ’ என்ற நிகழ்ச்சியை தனது ஆரம்பக் காலக்கட்டத்தில் தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.