சித்தி 2 தொடரில் இனி முதல் ராதிகாவிற்கு பதில் நடிப்பது இந்த முன்னணி நடிகையா.? அவரே அளித்த விளக்கம்.!

Varalakshmi has denied rumors that Sarathkumar is all set to play Radhika in the first role in the chithi-2 series.

சித்தி-2 தொடரில் இனி முதல் ராதிகா நடித்த கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்க உள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் வதந்தி என்று வரலட்சுமி மறுத்துள்ளார்.

சன் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஓடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த தொடர் ராதிகாவின் சித்தி . சமீபத்தில் அதன் இரண்டாம் பாகமும் தொடங்கப்பட்டது.அதில் நடித்து வந்த ராதிகா சமீபத்தில் தேர்தலில் மும்மரமாக ஈடுபட உள்ளதால் சித்தி-2 தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது சித்தி-2 தொடரில் இனி ராதிகாவிற்கு பதில் யார் நடிப்பார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.அதன்படி சித்தி-2 தொடரில் ராதிகா நடித்த கதாபாத்திரத்தில் இனிமுதல் ரம்யா கிருஷ்ணன் அல்லது தேவயானி அல்லது மீனா நடிக்க அதிகம் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது .அதன் பின் தற்போது சித்தி -2 சீரியலில் ராதிகா நடித்த கதாபாத்திரத்தில் இனி முதல் வரலட்சுமி சரத்குமார் நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று உலா வருகிறது.இது குறித்து வரலட்சுமி தரப்பிலிருந்து கூறியுள்ளதாவது,சித்தி-2 தொடரில் தான் நடிப்பதாக வெளியான தகவல் முற்றிலும் வதந்தி என்று கூறி மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.உண்மையில் சித்தி 2 தொடரில் இனி முதல் யார் நடிப்பார் என்பது சன் டிவி வாய் திறந்தால் தான் தெரிய வரும்.