"விக்ரம்" படத்தில் கமலுக்கு வில்லனாக இந்த முன்னணி நடிகர் நடிக்கிறாரா.?

It has been reported that Fahadfasil will play the villain in the upcoming Vikram film directed by Lokesh Kanagaraj and starring Kamal.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகும் விக்ரம் படத்தில் வில்லனாக ஃபகத் பாசில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் கமல்ஹாசன் அவர்கள் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்து வந்தார் .கொரோனா ஊரடங்கு மற்றும் சில பல காரணங்களா படத்தின் படப்பிடிப்பு இதுவரை தொடங்கவில்லை.இந்த நிலையில் கமல் அவர்கள் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 232வது திரைப்படத்தை நடிக்க உள்ளார் . அனிருத் அவர்கள் இசையமைக்கும் இந்த படத்தினை கமல் அவர்களின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது .

சமீபத்தில் கமல் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு “விக்ரம்” என்று பெயரிடப்பட்ட படத்தின் டைட்டில் டீசரை படக்குழுவினர் வெளியிட்டு வரவேற்பை பெற்றது . ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பை தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது விக்ரம் படத்தில் கமல் அவர்களுக்கு வில்லனாக பிரபல மலையாள நடிகர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது விக்ரம் படத்தின் வில்லனாக ஃபகத் பாசில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது