நடிச்சா ஹீரோ தான் என இருந்தவருக்கு இப்படி ஒரு நிலைமையா? வில்லனாக களமிறங்கும் மைக் மோகன்!

1980 காலகட்டத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்த மைக் மோகன் கடைசியாக கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான சுட்டப்பழம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த ஒரு தமிழ் திரைப்படத்திலும் நடிகர் மைக் மோகன் ஹீரோவாக நடிக்கவில்லை. அப்படியே சில ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகிவிட்டார்.
இந்த நிலையில், தற்போது பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் நல்ல கதாபாத்திரம் கொண்ட நல்ல படங்களில் நடிக்க முடிவு செய்து இருக்கிறாராம். அந்த சமயம் தான் தளபதி 68 படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு கதையை கூற உடனடியாக தான் நடிக்கிறேன் என படத்தில் நடிக்க மைக் மோகன் உறுதிகொடுத்துவிட்டாராம். இவர் தளபதி 68 படத்தில் நடிப்பது படத்தின் பூஜையில் கலந்து கொண்டபோது உறுதியாக்கப்பட்டது.
இந்த திரைப்படத்தில் அவர் விஜய்க்கு அண்ணன் அல்லது ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று தான் எதிர்பார்த்தனர். ஆனால், தற்போது வெளியான தகவல் என்னவென்றால், இந்த தளபதி 68 திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிப்பதே நடிகர் மைக் மோகன் தானம். ஆரமப காலகட்டத்தில் காதல் படங்களில் நடித்து வந்த மைக் மோகன் வில்லனாக நடித்தால் எப்படி செட் ஆகும் என்ற கேள்வி ஒரு பக்கம் எழுந்துள்ளது.
உண்மையாகவே படத்தில் அவர் எந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது தளபதி 68 படத்தின் டீசர் டிரைலர் வெளியான பிறகு தான் தெரியவரும். மேலும், நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ள மைக் மோகன் இந்த தளபதி 68 படத்தில் நடிக்க இதுவரை எந்த படத்திலும் நடிக்க வாங்காத சம்பளம் வாங்குகிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும். ஏற்கனவே இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியான வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு அண்ணனாக மைக் மோகன் நடிக்கவிருந்தார். பிறகு சில காரணங்கள் படத்தில் நான் நடிக்கவில்லை என்று படத்தில் இருந்து விலகிவிட்டார். அந்த சமயம் தான் அவர் ஹீரோவாக ஹரா படத்தில் நடித்துக்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025