பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறுவது இவர் தானா.?

It has been reported that Samyukta karthick is set to leave the Big Boss house this week with fewer votes.

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் சம்யுக்தா வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார நாமினிஷேனில் அனிதா , ரமேஷ், பாலாஜி,ஆரி,சோம்,சனம்,நிஷா ஆகியோரின் தேர்வு செய்யப்பட்ட நிலையில் இதில் அனிதா நாமினேஷன் டாப்பிள் கார்டை பயன்படுத்தி சம்யுக்தாவை அவருக்கு பதிலாக நேரடியாக நாமினேட் செய்தார் .

இதிலிருந்து குறைவான வாக்குகளை பெற்று இந்த வாரம் ஜித்தன் ரமேஷ் வெளியேற உள்ளதாக முதலில் தகவல்கள் வெளியாகியிருந்தது.ஆனால் அவர் இந்த வார கால் சென்டர் டாஸ்க்கில் ரம்யாவிடம் பொறுமையாக பதில் கூறி சிறப்பாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.அதே நேரத்தில் குறைவான வாக்குகளை சம்யுக்தா பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டது.

தற்போது வெளியான தகவலின்படி ,இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து சம்யுக்தா வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது.இது மட்டும் உண்மையெனில் சனம் மற்றும் அனிதாவிற்கு சந்தோஷமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறுவது இவர் தானா.?