தளபதி விஜய்க்காக ‘இந்த’ பாடலை ரீ-கிரியேட் செய்கிறாரா அனிருத் ?
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தளபதி விஜய் நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தை டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகிறது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் நிறைவடைந்துவிட்டன.
பீஸ்ட் படத்தின் போஸ்ட் ப்ரொடெக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே அனிருத் கடைசியாக இசையமைத்த விஜய் திரைப்படமான மாஸ்டர் திரைப்படத்தில் கில்லி பட கபடி தீம் மியூசிக்கை ரீ-கிரியேட் செய்து மிரட்டி இருந்தார்.
தற்போது கிடைத்த தகவலின்படி மீண்டும் அதே போல, விஜய் பட பாடலை ரீ-கிரியேட் செய்ய உள்ளாராம் அனிருத். கில்லி படத்தில் மெகா ஹிட் பாடலான அர்ஜுனரு வில்லு பாடலை பீஸ்ட் படத்தில் ரீ-கிரியேட் செய்ய உள்ளாராம்.
அப்படி நடந்தால் தியேட்டரில் ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டாடி விடுவார்கள். அர்ஜுனரு வில்லு பாடலை எப்போது கேட்டாலும் நமக்கு ஒரு எனர்ஜி கிடைக்கும். அதனை அனிருத் தனது ஸ்டைலில் எப்படி ரீ கிரியேட் செய்கிறார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)