சமீராவின் இரண்டாவது பெண் குழந்தையான நயரா கியூட்டியின் மாஸ் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக மே 17 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் வேலைநிறுத்தமும் செய்யப் பட்டுள்ளது. இதனால் பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இது ஒரு புறம் இருக்க இன்னொரு புறம் பல சினிமா நட்சத்திரங்களும், பிரபலங்களும் ஜாலியான வீடியோக்களையும், பழைய புகைப்படங்களையும், சிலர் டிரெண்டாங்கில் உள்ள சேலன்ஜ்களை செய்தும் , ஒரு சிலர் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தங்கள் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை சமீரா ரெட்டி தினமும் தனது இரண்டு குழந்தைகளுடன் அழகான வீடியோவை வெளியிடுபவர் , தற்போது சமீராவின் இரண்டாவது பெண் குழந்தையான நயரா கியூட்டியின் மாஸ் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் நயரா ரஜினி ஸ்டைலிஷ் கூலிங் கிளாஸை அணிவது போன்ற மாஸ்ஸான காட்சியாகும். தற்போது அந்த கியூட்டியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
unknown node