கால் அமுக்கிவிட வந்த மூத்த நடிகர்! கேப்டன் விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சி செயல்?

vijayakanth

Vijayakanth கேப்டன விஜயகாந்த் செய்த ஒவ்வொரு செயலும் நெகிழ்ச்சியான விஷயம் என்றே கூறலாம். அந்த அளவிற்கு மனதில் நல்ல விஷயங்களை வைத்துக்கொண்டு பலருக்கு பெரிய பெரிய உதவிகளை செய்திருக்கிறார். இதனால அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் கூட அவருடைய நினைவுகள் என்றுமே காலத்தால் அழியாதவையாக இருக்கும் என்றே கூறலாம்.

read more- விஜயகாந்தை கோபப்படுத்திய ரவுடிகள்! படப்பிடிப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்?

உதவி செய்வது மட்டுமின்றி கேப்டன் விஜயகாந்த் படப்பிடிப்பு தளங்களிலும் பல நெகிழ்ச்சியான  விஷயங்களையும் செய்திருக்கிறார். அப்படித்தான் ஒருமுறை ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு காட்சியில் விஜயகாந்தின் கால்-ஐ அமுக்கி விடும் படி இருந்ததாம்.  அந்த காட்சியில் பிரபல மூத்த நடிகரான டெல்லி கணேஷ் கேப்டன் விஜயகாந்த் கால்-ஐ அமிக்கிவிடுவது போல காட்சி இருந்ததாம்.

read more- தூங்கட்டும் எழுப்பாதீங்க! கறிசோறு போட்டு கேப்டன் விஜயகாந்த் செய்த செயல்?

ஆனால் அந்த காட்சியில்  விஜயகாந்த் நடிக்கவே மறுத்து விட்டாராம். இந்த தகவலை நடிகர் டெல்லி கணேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய டெல்லி கணேஷ் ” ஒரு படத்தில் நான் விஜயகாந்தின் காலை அமுக்கி விடுவது போல காட்சி இருந்தது. அந்த காட்சியில் நடிக்க எல்லாம் நான் தயாராகிவிட்டேன்.

read more- 2 லட்சத்தை அசால்ட்டாக தொலைத்த தயாரிப்பாளர்! விஜயகாந்த் செய்த செயல்? ப்பா என்ன மனுஷன்யா!

அந்த காட்சியை கூறியவுடன் விஜயகாந்த் நான் மூத்த நடிகர் மூத்த கலைஞர் அவர் எப்படி என்னுடைய காலில் விழுவார் விழவும் கூடாது என்று கூறிவிட்டாராம். உதவி இயக்குனரை கூப்பிட்டு இதெல்லாம் நீயே சொல்லமாட்டியா? என்று திட்டினார். அந்த காட்சி படத்திற்கு தேவையாக இருந்தது. ஆனால், எவ்வளவோ சொல்லியும் விஜயகாந்த் அந்த காட்சியில் நடிக்கவே இல்லை” எனவும் நடிகர் டெல்லி கணேஷ் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்