இந்தியன் 2 குறித்து காஜல் அகர்வால் கூறிய தகவல்..!!

Kajal Agarwal has given some information about the shooting for Indian 2 in a recent interview.

இந்தியன் 2 படத்திற்கான படப்பிடிப்பு குறித்த சில தகவலை காஜல் அகர்வால் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றி கூறியுள்ளார்.

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வந்த திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பூந்தமல்லியில் நடைப்பெற்று வந்த போது கிரேன் விபத்து ஏற்பட்டது. அதனையடுத்து இந்த படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. இதனிடையே கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் எனும் படத்தில் இணைந்தார்.

ஆனால் இந்தியன் -2 படம் கைவிடப்படவில்லை என்று படக்குழுவினர் சார்பிலிருந்து கூறப்பட்டது . அதற்கு பிறகு நடிகர் கமல் ஹாசன் தேர்தல் வேலையில் பிஸியாக இருப்பதால் இந்த படத்தில் தற்போது நடிக்க வாய்ப்பில்லை. மேலும் கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் பல படங்களின் படப்பிடிப்புகள் தொடங்கிய நிலையில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் தற்போது சமீபத்தில் நடிகை காஜல் அகர்வாலிடம் இந்தியன் 2 படத்திற்கான அப்டேட் குறித்த கேட்கையில், அவர் கூறியது ” வெளிநாட்டில் இருந்து தொழில்நுட்ப கலைஞர்கள் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வர முடியாததால் படப்பிடிப்பு தொடங்கவில்லை விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.