ஜெயம் ரவி குறித்து பரவிய தகவல்கள் முற்றிலும் தவறானது....!!!

This cinema news gives information about jayam ravi is completely false - jayam ravi kurithu paraviya thagavalkal murrilum thavaraanathu

ஜெயம் ரவி அடுத்ததாக ஸ்கிரீன் சீன்ஸ் எனும் நிறுவனத்துடன் 3 படங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருந்தார்.

ஜெயம் ரவி குறித்து பல வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.  இந்நிலையில், ஜெயம் ரவி அடுத்ததாக ஸ்கிரீன் சீன்ஸ் எனும் நிறுவனத்துடன் 3 படங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருந்தார்.

unknown node

திடீரென 3 படங்களில் கமிட் ஆகியதால் பலர் பல வதந்திகளை பரப்பி வருகின்றனர். அதில் ஒரு பத்திரிக்கையில் ஜெயம் ரவிக்கு போயஸ் கார்டனில் வீடு வாங்குவதற்கு ஆசை என்று தெரிவித்துள்ளனர்.மேலும், அந்நிறுவனத்திற்கு அந்த ஏரியாவில் வீடு இருப்பதாலும், அதனால் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அந்த வீடை வாங்கிவிட்டார் என செய்திகள் பரவி வந்தன.

இதனை ஜெயம் ரவியின் ரசிகர்கள் இது முற்றிலும் தவறான செய்தி என மறுப்பு தெரிவித்திருந்தனர். இதனை குறிப்பிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு இந்த செய்தி உண்மையில்லை எனவும் டிவிட்டரில் தெரிவித்து இருந்தார்.