இந்தியன்-2 பட ஷூட்டிங்கில் கலந்து கொள்ளாத உலகநாயகன்! காரணம் என்ன?!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது தயாராகி வரும் திரைப்படம் இந்தியன்-2. இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. உலக

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது தயாராகி வரும் திரைப்படம் இந்தியன்-2. இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. உலக நாயகன் கமலஹாசன் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும்,சித்தார்த், பிரிய பவனி சங்கர், ரகுல் பிரீத் சிங், சமுத்திரக்கனி, விவேக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.

unknown node

இந்நிலையில் நடிகர் கமலஹாசன் அண்மையில் நடைபெற்ற ஷூட்டிங்கில் கலந்து கொள்ளவில்லை என தற்போது தகவல் வெளியானது. அதாவது இப்பட ஷூட்டிங் ஆகஸ்ட் 15 முதல் ஆரம்பம் ஆனது. இதில் நடிகர் கமலஹாசன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் முதல் பத்து நாட்கள் படப்பிடிப்பு வரவில்லையாம். அந்த சமயம் சித்தார்த், பிரியா பவானி சங்கர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டதாம்.

தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளாராம். பீட்டர் ஹெய்ன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, முதலில் கமல்ஹாசனை வைத்து ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.