அர்ச்சனா அனைவரையும் காயப்படுத்துவார் என்றும், பாலாஜிக்கு சில இடங்களில் அது கண்ணை மறைக்குதோ என்று தோணுதுவதாகவும் ரம்யா கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியானது 16 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது .சனி மற்றும் ஞாயிறு தினங்களில் கமல்ஹாசன் தோன்றி அந்த வாரம் முழுவதும் நடந்த பிரச்சினைகளை எடுத்து கேட்பது மற்றும் எலிமினேஷன் படலமும் நடைபெறும் .
அந்த வகையில் கால் சென்டர் டாஸ்க்கில் ரம்யா ஜித்தன் ரமேஷ் அவர்களிடம் ரியோ குரூப்பை குறி வைத்து பல கேள்விகளை எழுப்பினார் .அதற்கு ஜித்தன் ரமேஷ் அவர்களும் பொறுமையாக உண்மையான பதில்களை கூறியிருந்தார்.இது தொடர்பாக கமல்ஹாசன் இன்றைய நிகழ்ச்சியின் மூன்றாவது புரோமோவில் கேட்டதாவது,ரமேஷ் நீங்க ரம்யா கேட்ட கேள்விக்கு சலிக்காமல் பதிலளித்து ரொம்ப நேரம் தாக்கு பிடிச்சீங்க,நீங்க கேட்ட கேள்விக்கு எல்லாம் பதில் கிடைத்ததா , உங்கள் பதில் என்ன என்று ரம்யாவிடம் கேள்வி கேட்கிறார் .
அதற்கு அர்ச்சனா அனைவரையும் காயப்படுத்துவார் என்றும், பாலாஜி ஒரு சில இடங்களில் அது கண்ணை மறைக்குதோ என்று தோணுது என்று கூறி நாமினேட் செய்வேன் என்று கூறுகிறார்.அதனையடுத்து கேபி என்று கூறி சில நேரம் யோசிக்கும் ரம்யாவிடம் இப்போது தெரியுதா கேள்விக்கு பதில் சொல்றது எவ்வளவு கஷ்டம் என்று கமல் கூறுகிறார்.இதோ அந்த வீடியோ
#BiggBossTamil இல் இன்று.. #Day56 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/h4ZdJ2dggM
— Vijay Television (@vijaytelevision) November 29, 2020