தெரியாம பண்ணிட்டேன் மன்னிச்சிடுங்க! விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்!
விக்ரம் எனும் மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். தமிழ் சினிமாவே எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கும் இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், லோகேஷ் கனகராஜ் பல ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வந்தார். அப்போது ஒரு பேட்டியில் தலைவர் 171 திரைப்படத்தை பற்றி பேசி இருந்தார். அதில் 3 வருடங்களுக்கு முன்பே தான் ரஜினியிடம் ஒரு கதையை கூறிவிட்டதாகவும் அந்த கதையில் ரஜினி நடிக்க படத்தை கமல்ஹாசன் தயாரிக்க இருந்ததாகவும் தெரிவித்து இருந்தார்.
அந்த வீடியோவை நெட்டிசன் ஒருவர் வெளியீட்டு ” உங்களுக்கும் விஜய்க்கு இடையே நடந்தது என்னவென்று எங்களுக்கு தெரியும் என விஜய்க்கும் லோகேஷ் கனகராஜுக்கும் சண்டை நடந்ததை சூசகமாக வைத்து கூறிருந்தார். இதனை முழுவதுமாக பார்க்காமல் ரஜினியை பற்றி லோகேஷ் பேசி இருக்கிறார் என விக்னேஷ் சிவன் அந்த வீடியோவை லைக் செய்ய விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விக்னேஷ் சிவனை தீட்டி தீர்த்தனர்.
உடனடியாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில், விக்னேஷ் சிவன் தனது x வலைதள பக்கத்தில் அன்பான விஜய் சார் ரசிகர்கள் மற்றும் லோகேஷ் சார் ரசிகர்கள் இந்த குழப்பத்திற்கு முதலில் என்னை மன்னிக்கவும். அந்த ட்வீட்டை மற்றும் முழுவதுமாக நான் பார்க்காமல் லோகேஷ் கனகராஜ் பேசிய வீடியோவை மட்டும் பார்த்தேன் எனக்கு பிடித்திருந்தது. நான் பார்க்காமல் லைக் செய்துவிட்டேன்.
எனக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கிய படங்கள் மற்றும் அவரது நேர்காணல்கள் மற்றும் அவர் பேசும் விதம் என எல்லாம் எனக்கு பிடிக்கும். நான் அவருடைய பெரிய ரசிகன். தளபதி விஜய் சாரின் லியோ திரைப்படத்தை கொண்டாட நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். லோகேஷ் வீடியோவை பார்ப்பதற்கு முன்பு நயன்தாரா நடித்த வீடியோ ஒன்றை பார்த்துக்கொண்டு இருந்தேன்.
அந்த வீடியோவும் எனக்கு பிடித்தது எனவே அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் வீடியோ வந்தது நான் பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்தது நான் லைக் செய்துவிட்டேன். இது என்னுடைய தரப்பில் நடந்த தெரியாத ஒரு தப்பு அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நடந்தததை மறந்துவிட்டு லியோ படத்தை ஒன்றாக கொண்டாடுவோம்” என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
மேலும் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே விஜய்க்கும் தனக்கு நடந்த பிரச்சனையை பற்றி விளக்கம் கொடுத்திருந்தார். அது என்னவென்றால், இந்த மாதிரி ஒரு செய்து வந்த போது தனக்கு ஜெகதீஸ் அனுப்பியதாகவும் அதனை விஜய்யும் தானும் ஒன்றாக பார்த்து சிரித்ததாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.