அந்த அளவுக்கு நான் கேவலமானவன் கிடையாது – ரியோ!

Rio says I'm not that disgusting after talking about Rio at the Open Nomination today, in the bigg boss house.

இன்று நடைபெறும் ஓபன் நாமினேஷனில் ரியோ குறித்து பேசப்பட்டதை அடுத்து நான் அந்த அளவுக்கு கேவலமானவன் கிடையாது என ரியோ கூறுகிறார்.

கடந்த 90 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்பொழுது 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். கடந்த வாரம் குறைவான வாக்குகள் பெற்று நேற்று ஆஜித் வெளியேறியிருந்த நிலையில் தற்போது ஆரி, ரியோ, ரம்யா, பாலா, சிவானி, சோம், கேபி ஆகியோர் மட்டுமே பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கிறார்கள்.

இந்த வாரம் போட்டியாளர்கள் அனைவர் முன்னிலையிலும் ஓபன் நாமினேஷன் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி ஆரி ரியோ கருத்துக்கள் தனக்கு போதுமானதாக இல்லை என கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்த பிரச்சினையை வைத்து நாமினேட் செய்கிறார். பின் சோம் பாலா மற்றும் ஆரியை நாமினேட் செய்தார். அதன் பின் பேசிய ரியோ, அந்த அளவுக்கு நான் கேவலமானவன் கிடையாது என அவர் கூறுகிறார். இதோ அந்த புரோமோ வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)