நடிகை சமந்தா கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவது போல ஒரு புகைப்படம் ஒன்றை வெளியீட்டு தான் (Myositis) என படும் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் குணமடைவேன் என்றும் பதிவிட்டிருந்தார்.
unknown nodeSamantha [Image Source: Twitter]
இதனையடுத்து, இவரது நடிப்பில் உருவாகியுள்ள யசோதா திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக சமீபத்திய தெலுங்கு பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சமந்தா தனது உடல் நிலை குறித்து கண்ணீருடன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
unknown nodeSamantha [Image Source: Twitter ]
அதில், சமந்தா பேசியது ” நான் என்னுடைய இன்ஸ்டாகிராமில் கூறியது போல சில நல்ல நாட்களும்..சில கெட்ட நாட்களும் உண்டு..ஒரு சில நாட்கள் எனக்கு ஒரு அடி நடக்க கூட மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால், திரும்பிப் பார்க்கும் போது நான் பல விஷயங்களைக் கடந்து இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன் என ஆச்சரியமாகப் பார்ப்பேன்.
இதையும் படியுங்களேன்-ஓவராக ஆடிய ‘வாரிசு’ நடிகர்.? சூப்பர் ஸ்டார் படத்திலிருந்து தடாலடியாய் தூக்கிய இயக்குனர்.!
unknown nodeSamantha [Image Source: Twitter ]
இங்கு நான் போராடவே இருக்கிறேன். இந்த இடத்தில் ஒரே ஒரு விஷியத்தை மட்டும் நான் சொல்கிறேன்.எனது உடல் நிலை உயிருக்கே ஆபத்தாக உள்ளதாக சில செய்திகளைப் பார்த்தேன். ஆனால், நான் அப்படியான ஒரு நிலையில் இல்லை.என்னுடைய உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை, இதுவரையிலும் நான் சாகாமல்தான் இருக்கிறேன்.
unknown nodeSamantha Cry [Image Source: Twitter ]
அந்தத் தலைப்புச் செய்திகள் அவசியமானவை என நான் நினைக்கவில்லை. மிகவும் கஷ்டமான நிலையில்தான் இருக்கிறேன், ஆனால், அதை எதிர்த்துப் போராடுவேன்,” என கண்ணீருடன் பேசியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கலங்கி போய்வுள்ளனர்.
unknown node