வாடிவாசல் திறக்க நானும் காத்திருக்கிறேன் – சூரி.!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள திரைப்படம் வாடிவாசல். இந்த படம் படம் ஜல்லிக்கட்டு கதையை வைத்து எடுக்கப்படவுள்ளதால் படத்தின் மீது

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள திரைப்படம் வாடிவாசல். இந்த படம் படம் ஜல்லிக்கட்டு கதையை வைத்து எடுக்கப்படவுள்ளதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது என்று கூறலாம். சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் படத்திற்காக காத்துள்ளனர்.

unknown node

இந்த நிலையில், நேற்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட்டிங்நடந்துள்ளது. அதில், ஜல்லிக்கட்டு செட் அமைத்து ஷூட்டிங் நடந்துள்ளது. அப்போது அங்கு நடிகர் சூரி சென்றுள்ளார்.

unknown node

அப்போது சூர்யா, வெற்றிமாறனுடன் எடுத்த புகைப்படத்தை தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டு “அண்ணன் வெற்றிமாறன்- அண்ணன் சூர்யா மிரட்டும் “வாடிவாசல்”ன் டெஸ்ட் ஷூட் . ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வீரம் விளைஞ்ச நம்மண்ணின் பாரம்பரிய விளையாட்டின் பெருமையை உலகறியச் செய்யும் இந்த காவியம். வாடிவாசல் திறக்க நானும் காத்திருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

unknown nodeunknown node

இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ளது.