இளையராணி நந்தினி தேவி பராக் பராக்...! பொன்னியின் செல்வன் புதிய போஸ்டர் வெளியீடு..

தமிழ் சினிமா ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக காத்திருக்கும் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனுடைய

தமிழ் சினிமா ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக காத்திருக்கும் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனுடைய அடுத்த பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என தெரிகிறது.

unknown node

இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், லைக்கா நிறுவனமும் இணைந்து பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். பொன்னியின் செல்வன் எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

unknown node

படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரபு, சரத்குமார், போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். படம் வெளியாக இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால், படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கான போஸ்டர்களை வெளியீட்டு வருகிறார்கள்.

unknown node

இந்த நிலையில், தற்போது படத்தில் இளையராணி நந்தினி தேவி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் வெளியிடப்பட்டுள்ளது. போஸ்டர் மிகவும் அருமையாக இருப்பதால், தற்போது லைக்குகள் குவிந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

unknown node