இளைஞனின் உயிரை காவு வாங்கிய சர்க்கார் ……!!!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள சர்க்கார் படமானது, நேற்று வெளியாகியுள்ள நிலையில் இதுகுறித்த விமர்சனங்கள் வந்துகொன்டே இருக்கின்றன. சர்க்கார் படமானது பல நாடுகளில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கான வரவேற்புகளும் பாராட்டுகளும் குவிந்து கொன்டே இருக்கின்றன.
வேலூர் மாவட்டத்தில்,ஈராளச்சேரியில் மணிகண்டன் என்ற இளைஞன் தன் வீட்டிற்கு முன்பு ஒட்டப்பட்டிருந்த சர்க்கார் பேனர்களை கிழித்து எறிந்துள்ளார். இதனையடுத்து, கோபம் கொண்ட தளபதி ரசிகர்களுக்கும் குடிபோதையில் உள்ள மணிகண்டனுக்கும் இடையே அடிதடி சண்டை நடந்துள்ளது.
இதனையடுத்து, மணிகண்டனின் உறவினர்கள் வீட்டிற்குள் இழுத்துச்சென்று அடைத்துவைத்துள்ளனர். சிறிதுநேரம் கழித்து வீட்டை திறந்து பார்க்கையில், மணிகண்டன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
source : tamil.cinebar.in