நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய்க்கு ஜோடியாக “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் குட் பை எனும் ஹிந்தி திரைப்படத்திலும் , புஷ்பா 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதில் வாரிசு படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
unknown nodeபடப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதற்கிடையில் ராஷ்மிகா காதல் வதந்தி குறித்த தகவலும் அடிக்கடி கிசு கிசுக்கப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்களேன்-ஷங்கர் திட்டியதால் 1000 பேர் முன்னாடி அழுத ஹீரோ.! அந்த சம்பவத்தால் பல லட்சம் நஷ்டம்.!
unknown nodeஅந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நடிகை ராஷ்மிகா மந்தனா ‘குட் பை’ பட புரொமோஷனில் மனம்விட்டு பேசியுள்ளார். “குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்குமே என்னால் நேரம் ஒதுக்க முடியவில்லை. காதலில் இருந்தால் அதற்காக நிறைய நேரம் செலவழிக்க வேண்டும்.
unknown nodeகாதலுக்கு பொறுமை மிக மிக அவசியம். தற்போது எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை. எதிர்காலத்தில் காதல் வந்தால் தகவல் சொல்கிறேன்” என்று அதிரடியாக பேசியுள்ளார் நடிகை ராஷ்மிகா. இதன் மூலம் ராஷ்மிகா காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.