"பொய் சொன்னால் முகத்தில் ஓங்கி அறை விழும்"- நடிகர் சித்தார்த் ட்வீட் ...!

"If you lie, the room will fall on your face" - Actor Siddharth tweeted ...!

உத்திரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கருத்தை குறிப்பிட்டு,பொய் சொன்னால் முகத்தில் ஓங்கி அறைவேன் என்று நடிகர் சித்தார்த் ட்வீட் செய்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவலானது அதிகரித்து வருகிறது.இதனால்,பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனா நோயாளிகள் இறக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்,தங்கள் மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக யாரேனும் பொய்யான தகவல்கள் பரப்பினால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறினார்.இவ்வாறு முதல்வர் யோகி சொன்னதை ஆங்கில செய்தி இதழ் ஒன்று வெளியிட்டிருந்தது.

இதற்கு கண்டனம் தெரிவித்து அந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து நடிகர் சித்தார்த் கூறியதாவது,”ஒழுக்கமான மனிதராக இருந்தாலும் அல்லது துறவியாக இருந்தாலும் அல்லது தலைவராக இருந்தாலும் பொய் சொன்னால் முகத்தில் ஓங்கி அறை விழும்”,என்று கூறியுள்ளார்.

https://twitter.com/Actor_Siddharth/status/1387038150283776003?s=20

சமீபகாலமாகவே,நடிகர் சித்தார்த் நாட்டில் நிலவும் பல பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார் என்பது குறிபிடத்தக்கது.