திருவள்ளூர்:ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தரமற்ற உணவால் ஊழியர்கள் 9 பேர் உயிரிழந்ததாக கூறி வதந்தி பரப்பிய புகாரில் சிறையில் உள்ள பிரபல யூடியூபர் சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கும் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையின் விடுதியில் வழங்கப்பட்ட தரமற்ற உணவை சாப்பிட்ட பெண்களில் 116 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, தரமற்ற உணவை உட்கொண்ட எட்டு […]
ஃபாக்ஸ்கான் நிறுவன ஊழியர்கள் 9 பேர் உயிரிழந்ததாக கூறி வதந்தி வதந்தி பரப்பியதாக பிரபல யூடியூபர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கும் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையின் விடுதியில் வழங்கப்பட்ட தரமற்ற உணவை சாப்பிட்ட பெண்களில் 116 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து, தரமற்ற உணவை உட்கொண்ட எட்டு பெண் தொழிலாளர்கள் இறந்துவிட்டதாக வெளியான செய்தியை அடுத்து,உயிரிழந்ததாகக் கூறப்படும் 8 தொழிலாளர்களின் உண்மை நிலையை […]
உத்திரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கருத்தை குறிப்பிட்டு,பொய் சொன்னால் முகத்தில் ஓங்கி அறைவேன் என்று நடிகர் சித்தார்த் ட்வீட் செய்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவலானது அதிகரித்து வருகிறது.இதனால்,பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனா நோயாளிகள் இறக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்,தங்கள் மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக யாரேனும் பொய்யான தகவல்கள் பரப்பினால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று […]
வாட்ஸாப்பில் வரும் ஊரடங்கு வதந்திகளை நம்ப வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் அண்மையில் செய்தியாளரை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், கொரோனா தடுப்பு பணிகள் தமிழகத்தில் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், கொரோனா மட்டுமல்லாமல் மழை காலத்தில் ஏற்படக்கூடிய டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்கள் தடுப்பு பணிகளும் விரைவாக நடைபெறுவதாகவும் கூறியுள்ளார். மேலும் மத்திய அரசால் தென்னிந்தியப் பகுதியில் மழை காலங்களில் கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும் […]
சென்னையில் மால்கள் , சினிமா தியேட்டர்கள் மட்டுமே மூட உத்தரவிடப்பட்டுள்ளது.ஆனால் காய்கறி கடைகள் , இறைச்சி , மளிகை கடைகள் போன்றவை வழக்கம் போல செயல்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் கூறினார். சென்னையில் அனைத்து கடைகள் மூடப்படுவதாக வதந்திகளை நம்பவேண்டாம். மேலும் வதந்திகளை பரப்புவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சுமார் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட இந்த வைரசால் இந்தியாவில் இதுவரை 30 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் விளைவு காரணமாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் அவர்களை தொடர் கண்காணிப்பில் வைத்திருப்பார்கள். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த 56 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர் என அம்மாவட்ட ஆட்சியர் உமா […]