விஜய்யை வைத்து கண்டிப்பாக படம் இயக்குவேன்.! – இயக்குனர் ஹரி உறுதி...

கமர்ஷியல் படங்களை மக்களுக்கு கொடுக்கும் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் ஹரி. இவர் இயக்கத்தில் வெளியான ஐயா, அருள், சாமி, வேல், தாமிரபரணி, கோவில், சிங்கம்,

கமர்ஷியல் படங்களை மக்களுக்கு கொடுக்கும் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் ஹரி. இவர் இயக்கத்தில் வெளியான ஐயா, அருள், சாமி, வேல், தாமிரபரணி, கோவில், சிங்கம், உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூலை குவித்து, ஒரு நல்ல கிராமத்து படத்தை பார்த்த முழு திருப்தியை கொடுத்தது.

unknown node

இவர் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் அருண் விஜய்யை வைத்து “யானை” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் கடந்த ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியான இரண்டு வாரங்களாக இன்னும் பல திரையரங்குககளில் இந்த படம் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.

unknown node

தமிழகத்தில் மட்டும் இந்த படம் 12 கோடிகளும், உலகம் முழுவதும் 16 கோடிகளும் வசூல் செய்துள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சமீபத்திய ஒரு பேட்டியில் இயக்குனர் ஹரி விஜய்யை வைத்து படம் இயக்குவேன் என தெரிவித்துள்ளார்.

unknown node

இது தொடர்பாக அவர் பேசியது ” விஜய்யை சாரை வைத்து ஒரு படம் இயக்க எனக்கு ரொம்ப ஆசை உள்ளது. அவரை நான் பல முறை சந்தித்து இருக்கிறேன். அப்போது எல்லாம் பல கதைகளை கூறியுள்ளேன். வரும் காலத்தில் விஜய்யை வைத்து கண்டிப்பாக படம் இயக்குவேன்” என உறுதியாக இயக்குனர் ஹரி தெரிவித்துள்ளார்.