நடிகர் அஜித் குமார் தற்போது நடித்து முடித்துள்ள “துணிவு” திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்க படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
unknown nodeThunivu Ajith [Image Source: Twitter]
சில்லா சில்லா என தொடங்கும் “துணிவு” படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக கிட்டத்தட்ட 1 மாதம் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதைப்போல படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிப்பதாலும், படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுவதாலும் படத்தின் ப்ரோமோஷன் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்களேன்-என் புள்ளைய பிச்சை எடுக்க நான் விடமாட்டேன்.! பிக்பாஸ் தனலட்சுமியின் தாய் பதிலடி.!
unknown nodeThunivu first single [Image Source: Twitter]
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு துணிவு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் அஜித் கலந்துகொள்வார் என ஒரு தகவல் பரவியது. பிறகு ஒரு நல்ல படத்திற்கு ப்ரோமோஷன் தேவையில்லை என அஜித் தெரிவித்தார். இதனையடுத்து, அஜித் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது தனக்கு வருத்தம் தான் என உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
unknown nodeUdhayanidhi Stalin About Thunivu [Image Source: Twitter]
இதுகுறித்து பேசிய அவர் ” ‘துணிவு’ படத்தின் புரமோஷனுக்கு அஜித் வராதது சற்று வருத்தம்தான் . புரமோஷனுக்கு வருவது குறித்து அவரிடம் பேசினோம். ஆனால், அவர் மிகவும் தாழ்மையாக வர முடியாது என்று சொல்லிவிட்டார். அதில் இருந்தே அவர் வேற லெவல் என்பதை புரிந்து கொண்டேன். அதனால் ப்ரோமோஷனுக்கு வரச்சொல்லி அவரை தொந்தரவு செய்யமாட்டேன். அவர் புரமோஷனுக்கு வரவில்லை என்றாலும், படம் ரொம்ப சூப்பராக வந்திருக்கு” என தெரிவித்துள்ளார்.