மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இந்நிலையில், இவர் இயக்குனர் ரோகாந்த் இயக்கும் புதிய படத்தில், விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 14-ம் தேதி பழனியில் துவங்கிய நிலையில், தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், இப்படத்தில் நடிகை அமலாபால், விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவிருந்த நிலையில், இவர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இப்படத்தில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து, நடிகை அமலாபால் இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், மும்பையில் இவர் தனது தனிப்பட்ட செலவில் தான் ஷாப்பிங் செய்ததாகவும், இதற்கு தயாரிப்பு நிறுவனம் பட்ஜெட் விவகாரத்தில் முணுமுணுத்துக் கொண்டே இருந்ததாகவும், அமலாபால் படத்தில் இருப்பது பிடிக்கவில்லை என தனிப்பட்ட முறையில் தகவல் அனுப்பியதாகவும், குற்றம் சாட்டியுள்ளார்.மேலும், அவர் கூறுகையில், விஜய் சேதுபதி மீது தனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றும், தற்போதும் அவரது ரசிகை என்றும் அவர் அறிக்கையின் இறுதியில் தெரிவித்துள்ளார்.
unknown nodeவிஜய்சேதுபதி மீது எனக்கு எந்த பிரச்சனையுமில்லை! விஜய்சேதுபதியின் படத்தில் இருந்து விலகியது குறித்து நடிகை அமலாபால் விளக்கம்!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இந்நிலையில், இவர் இயக்குனர் ரோகாந்த் இயக்கும் புதிய படத்தில், விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த