தனுஷிற்கு ஜோடியாக நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை – ரஜிஷா விஜயன்..!!

Actress Rajisha Vijayan has said that she did not expect Dhanush to act as a couple

தனுஷிற்கு ஜோடியாக நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை என்று நடிகை ரஜிஷா விஜயன் தெரிவித்துள்ளார்.

நடிகை ரஜிஷா விஜயன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்கிறார். தற்போது தமிழில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. வெளியாகி தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல ஒரு விமர்சனத்தையும் சிறந்த வசூலையும் செய்து வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நடிகை ரஜிஷா விஜயன் தனுஷுடன் நடித்தது குறித்த அனுபவத்தை தெரிவித்துள்ளார். இதில் அவர் கூறியது ” நான் தனுஷ் சார் நடித்த அசுரன் திரைப்படத்தை பார்த்தேன். அந்த படத்தில் அவரது நடிப்பை பார்த்து விட்டு அசந்துபோய்ட்டேன். நான் தனுஷ் சாருக்கு ஜோடியாக இவ்வளவு சீக்கிரம் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. அவரும் நடித்தது மிகவும் மகிழ்ச்சி” என்றும் கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்துள்ளார் யோகி பாபு, நட்டி நடராஜன், கௌரி கிஷன், லால் போன்றார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷிற்கு ஜோடியாக நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை – ரஜிஷா விஜயன்..!!