காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை சமந்தா அடுத்ததாக இயக்குனர் ஹரி & ஹரிஷ் ஆகியோர் இயக்கத்தில் “யசோதா” எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் உன்னி முகுந்தன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு மணி சர்மா இசையமைத்துள்ளார்.
unknown nodeYashoda Trailer [Image Source: Twitter }
படத்திற்கான டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். இந்த படம் நாளை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதையும் படியுங்களேன்-தயவு செஞ்சு அதை கேட்காதீங்க….ரசிகர்களால் செம கடுப்பான சிம்பு.!
unknown nodeYashoda Trailer [Image Source: Twitter }
படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், சமந்தா இன்ஸ்டாகிராமில் பதட்டமாக இருப்பதாக லேட்டஸ்டாக எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியீட்டு பதிவிட்டுள்ளார்.
unknown nodeSamantha [Image Source: Twitter ]
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ” நான் ரொம்ப பதட்டமாக இருக்கிறேன். அதேவேளையில் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளேன். இன்னும் ஒரு நாள் தான் நாளை யசோதா படம் வெளியாகிறது. நல்ல மகிழ்வோடு என் இயக்குனர், தயாரிப்பாளர் & படக்குழு அனைவரும் உங்களுடைய விமர்சனங்களை எதிர்பார்க்கிறோம்.” என பதிவிட்டுள்ளார்.
unknown node