ஃபைட்டர் படத்திற்கு இந்த நிலைமையா? 200 கோடியை நெருங்க முடியாமல் திணறல்!!

fighter box office

ஃபைட்டர் திரைப்படம் வெளியான நாளில் இருந்து தற்போது வரை எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

ஃபைட்டர்

இயக்குனர்  சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், நடிகர் ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோன், அனில் கபூர், கரண் சிங் குரோவர், அக்ஷய் ஓபராய், ரிஷப் சாவ்னி மற்றும் சஞ்சீதா ஷேக் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம்  ஃபைட்டர். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி வெளியானது.

ஃபைட்டர் விமர்சனம் 

முத்தக்காட்சியில் எழுந்த சர்ச்சை! ‘ஃபைட்டர்’ படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பிய விமானப்படை அதிகாரி!

ஃபைட்டர் திரைப்படம் வெளியாவதற்கு முன்பு அதனுடைய ட்ரைலர் வெளியாகி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், படம் அந்த அளவிற்கு எதிர்பார்த்தது போல இல்லை என்ற காரணத்தால் படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படம் பார்த்த பலரும் படத்தின் குறைகளை கூறி வருகிறார்கள்.

ஃபைட்டர் வசூல் 

இந்த திரைப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் கிடைத்து வருவதால் படத்தின் வசூலும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதன்படி, படம் வெளியான நாளில் இருந்து தற்போதுவரை அதாவது 14 நாட்களில் உலகம் முழுவதும் 184 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

போலி மரணம்: பூனம் பாண்டேவுக்கு நோட்டீஸ்.!

இதில் மிகவும் சோகமான விஷயம் என்னவென்றால், இந்த திரைப்படம் 14-வது நாளில் மட்டும் 2.75 கோடி வசூல் செய்துள்ளது. 200 கோடியை கூட கடக்கமுடியாமல் ஹிருத்திக் ரோஷன் படம் திணறி வருவது பாலிவுட் திரையுலகில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்