"அனிருத் கலக்கிட்டாரு"...தேவாரா படம் எப்படி இருக்கு? டிவிட்டர் விமர்சனம் இதோ!!

தேவாரா திரைப்படம் தெலுங்கில் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், தமிழில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

Devara Twitter Review

சென்னை :தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள “தேவாரா” திரைப்படம் மிகப்பெரிய எதிர்பரப்புகளுக்கு மத்தியில், இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.  இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருக்கிறார். எனவே, இதன் காரணமாகவும்,  படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது.

பொதுவாகவே அனிருத் தான் இசையமைக்கும் படங்களை முழுவதுமாக பார்த்துவிட்டு தன்னுடைய விமர்சனத்தை டிவிட்டரில் எமோஜி மூலம் கொடுத்து விடுவார். அப்படி அவர் கொடுக்கும் படங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும். அப்படி தான் தேவாரா படத்திற்கு அவர் நெருப்பு எமோஜிகளை பதிவிட்டு இருந்த நிலையில். படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது.

unknown node

எனவே, எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தினை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் டிவிட்டரில் தெரிவித்துள்ள விமர்சனங்களை பற்றி பார்க்கலாம்.

படத்தை பார்த்த ஒருவர் “தேவரா படம் சுமாராக இருக்கிறது. முதல் பாதி நன்றாக இருந்தது. இரண்டாவது பாதி ஓகேவாக இருந்தது. அனிருத் பின்னணி இசை மற்றும் பாடல்கள் மிகவும் அருமையாக இருந்தது. சில காட்சிகள் இப்படி தான் இருக்கும் என நாம் யூகிப்பதே படத்தின் முக்கிய நெகட்டிவ்” எனவும் கூறியுள்ளார்.

unknown node

மற்றொருவர் “தேவாரா படம் பொழுதுபோக்கை வழங்கும் ஒரு அதிரடிதிரைப்படம். படத்தில் என்டிஆர் ஜான்விகபூர் தனது சிறப்பான நடிப்புடன் படத்தை எடுத்துச் சென்றார்கள்” என கூறியுள்ளார்.

unknown node

மற்றொருவர் ” தேவாரா ஒரு தியேட்டர் பார்க்கும் தெலுங்குப் படம், மோசமான படம் அல்ல, இடைவேளை காட்சி மிகவும் அருமையாக இருக்கிறது. NTR நடிப்பு நன்றாக இருக்கிறது. ஆனால், மோசமான மலையாள டப்பிங் உங்களை தியேட்டரில் சிரிக்க வைக்கும். எனவே, கேரள பார்வையாளர்கள் தமிழ் பதிப்பைப் பாருங்கள்” என கூறியுள்ளார்.

unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node