அனல் பறக்கும் ப்ரோமோஷன்...விண்ணில் பறக்கும் 'துணிவு'... வியக்க வைக்கும் வீடியோ.!

அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் எச்,வினோத்

அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் எச்,வினோத் இயக்கியுள்ளார். படத்தை பிரபல தயாரிப்பாளரான போனிகபூர் தயாரிக்கிறார்.

unknown node

Thunivu Movie [Image Source : Twitter]

படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும், வெளிமாநிலங்களில் லைக்கா நிறுவனமும் திரையரங்குகளில் வாங்கி வெளியீடுகிறது. எனவே, படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக தொடங்கியுள்ளது.

இதையும் படியுங்களேன்-வாரிசு Vibe-ல் ராஷ்மிகா மந்தனா….கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப செய்தி…!

unknown node

Thunivu promotion [Image Source : Twitter]

அதன் ஒரு பகுதியாக, வெளிநாட்டில் (UK)- வில் வானத்தில் பறந்துகொண்டே துணிவு படத்தின் பேனரை பறக்கவிட்டு லைக்கா நிறுவனம் ப்ரோமோஷன் செய்துள்ளனர்.   இதுவரை கோலிவுட்டில் இருக்கும் எந்த நடிகரின் படத்திற்கும் இப்படி ஒரு ப்ரோமோஷன் செய்யவில்லை. இதுவே முதன் முறை.  எனவே இதனை பார்த்த பலரும் இது தான் நிஜ ப்ரோமோஷன் என கூறி வருகிறார்கள்.

unknown node

இந்த ப்ரோமோசனனுக்கான வீடியோ ஒன்றையும் லைக்கா நிறுவனம் ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அது மட்டுமின்றி, வரும் டிசம்பர் 31-ஆம் தேதி படத்திலிருந்து ஒரு அப்டேட் ஒன்றும் வெளியாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. லைக்கா வெளியிட்டுள்ள அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும், நேற்று படத்திலிருந்து கேங்ஸ்டா என்ற பாடல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node