மருத்துவமனையில் பவர் ஸ்டார் – அதிர்ச்சியளிக்கும் புகைப்படம் உள்ளே ...!

A recent photo of Powerstar being admitted to hospital due to ill health has shocked fans.

உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பவர்ஸ்டாரின் அண்மைய புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தமிழ் திரையுலகின் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் தான் பவர் ஸ்டார் சீனிவாசன். கண்ணா லட்டு திண்ண ஆசையா எனும் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்ட இவர், அதன் பின்பு தொடர்ச்சியாக பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் அண்மையில் வனிதா விஜயகுமார் உடன் இணைந்து பிக்கப் டிராப் எனும் படத்தில் நடித்து வந்தார். இந்த படத்துக்கான படப்பிடிப்பின்போது பவர்ஸ்டார் திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்ததால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள பவர்ஸ்டாரின் தற்போதைய நிலை குறித்து அதிர்ச்சிகரமான ஒரு புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

unknown node

இந்த புகைப்படத்தை பார்த்த பின் அவரது ரசிகர்கள் பலரும் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் பவர்ஸ்டாரின் உடல்நிலை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.