தி க்ரே மேன் பரம்பரையில் நம்ம ஊரு தாதா.! வெறித்தனமான டிரெய்லர் இதோ...

அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்களான ரூஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் “தி க்ரே மேன்” என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூலை 22 ஆம் தேதி

அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்களான ரூஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் “தி க்ரே மேன்” என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூலை 22 ஆம் தேதி நேரடியாக நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அமெரிக்காவில் விறு விறுப்பாக நடைபெற்று வந்தது. அந்த படப்பிடிப்பில் தனுஷ் கலந்துகொண்டு தனக்கான காட்சிகளை நடித்து கொடுத்து முடித்தார். இப்பொது படத்தின் அணைத்து படப்பிடிப்புகளும் பின்னணி பணிகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது.

சமீபத்தில் கூட படத்திலிருந்து , வெளியான தனுஷ் போஸ்டர் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது தி க்ரே மேன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. டிரைலரை பார்த்த தனுஷ் ரசிகர்கள் ஹாலிவுட் பரம்பரையில் நம்ம ஊரு தாதா என்று கூறி வருகிறார்கள் .

unknown node