சாந்தனுவின் கொஞ்சம் கொரோனா நிறைய காதல் குறும்படம் இதோ.!

சாந்தனு அவர்கள் இயக்குநராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். ஆம் கொஞ்சம் கொரோனா நிறைய காதல் என்னும் குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.

சாந்தனு அவர்கள் இயக்குநராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். ஆம் கொஞ்சம் கொரோனா நிறைய காதல் என்னும் குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.

முன்னாள் நடிகரும், இயக்குநருமான பாக்கியராஜ் அவர்களின் மகனான சாந்தனு அவர்களை நாம் பல கதாபாத்திரத்தில் பார்த்திருக்கிறோம். கடைசியாக வானம் கொட்டட்டும் படத்தில் நடித்திருந்தார் தற்போது கூட விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இவர் ஊரடங்கை முன்னிட்டு தனது மனைவி கிகியுடனும் , குடும்பத்துடனும் இணைந்து டிக்டாக் செய்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் இவர்கள் இருவரும் இணைந்து யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளதாகவும் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது சாந்தனு அவர்கள் இயக்குநராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். ஆம் கொஞ்சம் கொரோனா நிறைய காதல் என்னும் குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார். அந்த படத்தின் டீசரை சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது குறும்படம் சமூக வலைத் தளங்களில் வெளியாகியுள்ளது. கொஞ்சம் கொரோனா நிறைய காதல் குறும்படத்தை பார்த்து விட்டு  பல பிரபலங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

unknown node