இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் நீண்ட ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் திரைப்படம் பொம்மை. இந்த படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார்.
unknown nodeஇந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த படத்தை பார்க்க ஒட்டு மொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். விரைவில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
unknown nodeஇந்த நிலையில், படத்திற்கான டிரைலர் நாளை வெளியாகும் என்று நேற்று அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது, டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
Happy to release the trailer of #BOMMAI – https://t.co/zHSiimHB1Z@iam_SJSuryah sir I’m sure we are going to see ur terrific performance one more time on big screen????????????❤️ Best wishes to @Radhamohan_Dir sir @thisisysr sir @priya_Bshankar and entire team for a big success ????❤️
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) June 1, 2022
டிரைலரில், காட்டப்பட்டுள்ள ஒவ்வொரு காட்சி, எஸ்.ஜே.சூர்யாவின் மிரட்டலான நடிப்பு, மற்றும் யுவனின் துல்லியமான இசை, என அனைத்தும் காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனையடுத்து படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.