நடிகர் சிம்பு மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் கெளதம் மேனன் இயக்குகிறார். இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
unknown nodeஇந்த படத்தில் நடித்து முடித்துவிட்டு பத்து தல படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கிடையில், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். அந்த நிகழ்ச்சியும் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.
unknown nodeஇதற்கிடையில் நடிகர் சிம்பு ஆட்டோக்காரர் கெட்டப்பில் இருக்கும் வீடியோ ஒன்று நேற்று சமூக வலைதளத்தில் வைரலாகி வந்தது. இதனால் ரசிகர்கள் அடுத்த படத்திற்கான கெட்டப் என்று கூறிவந்தனர்.
unknown nodeஆனால், அது படத்திற்காக இல்லயாம், சிம்பு விளம்பரத்திற்காக ஆட்டோக்காரர் கெட்டப் போட்டுள்ளாராம். அந்த வீடியோவில் சிம்பு மிகவும் மாஸாக கையில் கர்ச்சீப் வைத்துக்கொண்டு உள்ளே செல்வது, வெளியே வருவது போல காணப்படுகிறார்.
unknown node