அதிரடி சண்டைக்காட்சி.! தெறிக்கும் வசனம்.! அனல் பறக்கும் "யானை" டிரைலர் இதோ..!

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "யானை". இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர்

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “யானை”. இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, சரண்யா ரவி, யோகி பாபு, அம்மு அபிராமி, விஜய் டிவி புகழ், ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளர்கள்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ட்ரம்ஸ்டிக் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் என அனைத்தும் முடிவடைந்து ரிலீஸ்-ஆக தயாராகவுள்ளது.

இந்த நிலையில், படத்திற்கான டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. டிரைலரில் அதிரடி சண்டைக்காட்சி, அசத்தலான அருண் விஜயின் மாஸ் வசனம், ஜிவியின் மெல்லியமான இசை என ட்ரைலர் அனல் பறக்கிறது. மேலும் யானை திரைப்படம் வரும் ஜூன் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

unknown node