கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பென்குயின் படத்தின் ‘கோலமே’ பாடல் அனிருத் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் ‘பென்குயின்’. ஹீரோயினுக்கு கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண். இந்த படத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், லிங்கா உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் ஒடிடி பிளாட்பாரத்தில் வருகிற ஜீன் மாதம் 19ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று கூறப்பட்டிருந்தது.
சமீபத்தில் இந்த படத்தின் டீசரை தென்னிந்திய சினிமாயுலகில் பிரபல நடிகைகளாக வலம் வரும் திரிஷா, சமந்தா, மஞ்சு வாரியர் மற்றும் டாப்சி அவர்களாலும், இந்த படத்தின் டிரைலரை தனுஷ், மோகன்லால், நானி ஆகிய முன்னணி நடிகர்களாலும் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தொலைந்து போன மகனை தேடும் அம்மாவாக உள்ள பென்குயின் படத்தின் ‘கோலமே’ என்ற பாடல் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் அனிருத் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. விவேக் பாடலுக்கு வரிகள் எழுத சுஷா பாடியுள்ளார்.
unknown nodeunknown nodeunknown node