சூர்யாவின் ET ட்ரைலர் இதோ.! பக்கா ஆக்சன் கமர்சியல் திரைப்படம் ஆன் தி வே.!

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் படத்தை பார்க்க காத்துள்ளார்கள்.

unknown node

ஏற்கனவே படத்திலிருந்து வெளியான பாடல்கள் மற்றும் டீசர் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. டிரைலரை பார்க்கையில் பக்கா கமர்ஷியல் படமாகவும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது என்பதை உணர்த்துகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார்.

unknown node